பாரிசில் காலநிலை எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்: கண்ணீர் புகை வீசிய காவல்துறை


பிரான்சின் தலைநகர் பாரிசில் காலநிலை ஆர்வலர்கள் சுற்றுச்சூழலை மாசுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்றை நடத்தினர். அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பு இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

சால் பிளேயல் {Salle Pleyel} என்ற இடத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஒன்று கூடிய காலநிலை ஆர்வலர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தை தடுக்கும் முயற்சியல் ஈடுபட்டனர்.

டோட்டல் எனர்ஜியின் (TotalEnergies) வருடாந்த பொதுக் கூட்டம் நடைபெறும் மண்பத்திற்கு வெளியே வீதிகளில் அமர்ந்திருந்தவாறு கோசங்களை எழுப்பி காலநிலை ஆர்வலர்கள் போராட்டத்தை நடத்தினர்.

No comments