வீட்டுக்கு வீடு கஞ்சா வளர்ப்பு திட்டம்?

 


கஞ்சா பயிரிடுவதற்கு அனுமதி கிடைத்துள்ளதால் முன்னோடி திட்டமாக கஞ்சா பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர் ஊடாக முதலீட்டுச் சபையின் பங்களிப்புடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், தற்போது முதலீட்டாளர்களைத் தேடி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டத்தை தொடங்குவது குறித்து துறைசார்ந்த நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது

கஞ்சாவை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை உருவாக்க அவர்கள் எதிர்பார்த்து வருவதால், கஞ்சா செய்கை மாத்திரம் அல்ல, விரிவான முதலீட்டை அவர்கள் நோக்குவதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

திட்டத்தை செயற்படுத்த தளங்கள் அல்லது வலயங்களையும் அவர்கள் அடையாளம் காண வேண்டும் என்றார்.


நிபுணர் குழுவின் முன்மொழிவுகளின் அடிப்படையில், அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடக்குவதற்கான விரிவான நடைமுறையை அதிகாரிகள் உருவாக்குவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


எதிர்காலத்தில் தடைகள் ஏற்படாமல் இருக்க, தற்போது விரிவான திட்டம் வகுக்கப்படுகிறது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments