துருக்கி தேர்தல் முடிவுகள்: எர்டோகன் வெற்றி பெற்றதாக அறிவித்தார்


துருக்கிய அதிபர் தேர்தலில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தற்போதைய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தொடக்கத்தில் 52.09% வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட கெமல் கிலிடாரோஸ்லுவின் 47.91% வாக்குகளைப் பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

துருகியின் தேர்தல் ஆணையகத்தின் தலைவர் Ahmet Yener ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் எர்டோகன் ஆரம்ப முடிவுகளுக்கு ஏற்ப மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.

இஸ்தான்புல்லில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே தனது ஆதரவாளர்களுக்கு உரையாற்றிய எர்டோகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார், அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் அவர் கிலிடாரோக்லுவுக்கு எதிராக முன்னணியில் இருப்பதாகக் காட்டியது.

எங்கள் 85 மில்லியன் குடிமக்களும் மே 14 மற்றும் மே 28 தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள்" என்று எர்டோகன் இஸ்தான்புல்லில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார்.

யாரும் தோற்காத வகையில் வெற்றி பெறுவோம் என்றோம். எனவே இன்று ஒரே வெற்றியாளர் துர்கியே என்று அவர் வலியுறுத்தினார்.

எங்கள் தேசத்தின் ஆதரவுடன் நாங்கள் இரண்டாவது சுற்று ஜனாதிபதித் தேர்தலை முடித்துள்ளோம் என்று கூறிய எர்டோகன் துர்கியே மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆளும் பொறுப்பை மீண்டும் எங்களிடம் தெரிவித்த எங்கள் தேசத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

கடந்த இருவாரங்களுக்கு முன் நடைபெற்ற முதற்கட்ட வாக்கெடுப்பில் எர்டோகன் முதல் சுற்றுத் தேர்தலில் 49.52% வாக்குகளைப் பெற்று Kılıçdaroğlu இன் 44.88% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

எர்டோகன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், சவுதி மன்னர் சல்மான், சுவீடன் பிரதமர் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன்இ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனின் ஜனாதிபதி வொலடிமீர்  ஜெலன்ஸ்கீ ,அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் என உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

No comments