திருமணத்திற்கு தயாரான மணமகள் மீது அமில வீச்சு


வெலிகம, மதுராகொட பிரதேசத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெறவிருந்த திருமண வைபவத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த மணமகள் மீது அமில வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மணப்பெண்ணின் வீட்டிற்கு அதிகாலை 3 மணியளவில் சென்ற  நபர் ஒருவர் அமிலத்தை வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த யுவதி தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலுக்கு உள்ளான யுவதி சில வருடங்களுக்கு முன்னர் வெலிகம மதுராகொட பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய நபருடன் காதல் உறவை ஏற்படுத்தி பின்னர் பெற்றோரின் எதிர்ப்பினால் உறவை முறித்துக் கொண்டார்.

இதற்கு பழிவாங்கும் நோக்கில் குறித்த இளைஞரால் அமில வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments