முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது !


பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது என முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

92-ஒக்டேன் பெட்ரோல் விலை 7 ஆல் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது, எனவே அது தற்போதுள்ள கட்டணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என அச்சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டிக்கு வழங்கப்படும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகியன எரிபொருள் விலையை குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments