தொடரும் உலங்கு வானூர்தி விபத்துக்கள்: வானோடிளுக்கு பயிற்சி முடிக்கும் வரை இடைநிறுத்தம்


அமெரிக்க இராணுவத்தில் கடந்த மாதத்தில் நடந்த நான்கு உலங்கு வானூர்தி விபத்துக்களை அடுத்து முக்கிய பயணங்களைத் தவிர ஏனைய பயணங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

விமான ஓட்டிகளுக்கு தேவையான பயிற்சியை முடிக்கும் வரை விமானப் போக்குவரத்தை நிறுத்துமாறு ஜெனரல் ஜேம்ஸ் மெக்கன்வில்லே McConville உத்தரவிட்டார்.

மே 1 முதல் 5 வரை பயிற்சி முடிக்கப்படும். அதே நேரத்தில் தேசிய காவலர் மற்றும் ரிசர்வ் பிரிவுகளுக்கு மே 31 வரை பயிற்சிகள் இருக்கும் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவம் போர் உலங்கு வானூர்தியை மட்டுமே இயக்குகிறது. அமெரிக்க போர் விமானங்கள் விமானப்படை அல்லது கடற்படையின் ஒரு பகுதியாகும் இருக்கிறது.


No comments