அமைச்சர் கதிரை:கிடப்பில் போட்ட ரணில்!எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு திகதி குறிப்பிடப்படாது தாமதமாகியுள்ளது .

அதனால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் சிலர், கடும் அதிருப்தியில் உள்ளனர் என அந்த தகவல் தெரிவித்துள்ளது  லங்காதீப .

​​அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமென திகதி குறிப்பிட்டு கடந்த வாரத்தில் பல்​வேறான தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனால், மொட்டுக்கட்சியினர் பலர் கடும் எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்தனர்.  இந்நிலையில், அமைச்சர்களாக நியமிக்கப்படவேண்டிய மொட்டுக்கட்சியினரின் பெயர்கள் அடங்கிய பட்டியல், அந்த கட்சியின் தலைவரினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சில மாதங்களுக்கு முன்னரே அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments