புத்தர் முறிகண்டி விரைகின்றார்!

 


முறிகண்டிக்கு முன்னால் உள்ள காட்டுப்பகுதியில்  குடியேற்றத்திட்டம் ஒன்றுக்கான முன்னகர்வுகள் இடம்பெறுவதாக  கூகுள் வரைபடம் அம்பலப்படுத்தியுள்ளது . இது முறிகண்டிக்கு முன்னால் இரனைமடுக்குளத்தினை அண்டிய காட்டுப்பகுதியினை உள்ளடக்கி நடைபெறுகிறது. இரணைமடுக்குளத்தினை சூழ மண் அகழ்வுகளான ஆதாரங்களும் இதில் புலனாகிறது. 

மீளவும் இரணைமடுக்குளத்தினை மகாவலி வலயத்தினுற் கொண்டுவரும் நகர்வுகளும் இடம்பெறுதாக தகவல்கள் வருகிறது.  மேற்படி காட்டுப்பகுதியில் விகாரைகட்டுதானம் ஒன்றிற்கான அத்திவாரம் தெளிவாக தென்படுகிறது. இதன் அமைவிடம் சரியாக முறிகண்டி கோவிலுக்கு முன்னால் தென்படுகிறது. இது கண்டி வீதியில் பயணம் செய்யும் போது பார்வையிட முடியாத  வகையில் காடுகள் காணப்படுகிற அதே நேரம் மக்கள் பயன்பாட்டில் இல்லாத பல வீதிகள் உள்ளே செல்கிறது.

No comments