கல்விச் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றுவேன் - ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை


வினாத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுத்தால் கல்விச் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வியை பணயம் வைக்க  ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுத்தால் அவசரச் சட்டத்தின் கீழ் கல்வி அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்

No comments