கர்ப்பிணி மனைவி மீது இடியன் துப்பாக்கியால் சுட்ட கணவன்


கிளிநொச்சி - அக்கராயன்குளம் யா கரிதாஸ் குடியிருப்பு பகுதியில் காதலித்து திருமணம் முடித்த, மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு காயப்பபடுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (11) இடம்பெற்றது.

இதன் போது காயமடைந்த  ஐந்து மாத கர்ப்பிணியான பெண் உடனடியாக அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவத்தில் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே 

படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

கணவன் மது போதைக்கு அதிகம் பழக்கப்பட்டவர் என்பதனால் அடிக்கடி குடும்பத்தில் சண்டைகள் இடம்பெறும் எனவும்  இதன் விளைவாகவே  மனைவி மீதான துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய நபர் அக்கராயன்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments