புதினை கைது செய்ய முயற்சிப்பது ரஷ்யா மீதான போர் அறிவிப்பாகவே கருதப்படும் - முன்னாள் அதிபர் மெட்வெடேவ்


ரஷ்யப் படைகள் கியேவ் அல்லது லிவிவ் நகருக்கு முன்னேறலாம் என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவராக  டிமிட்ரி மெட்வெடேவ் ரஷ்ய செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இதேநேரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவின் அடிப்படையில் ரஷ்ய அதிபர் புதினை கைது செய்ய முயற்சிப்பது ரஷ்யா மீதான போர் அறிவிப்பாகவே கருதப்படும் என்று முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்துள்ளார்.

போரின் போது, உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு புதினை கைது செய்ய ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், மெத்வதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத பலம் கொண்ட ரஷ்யாவின் அதிபர் யேர்மனியின் எல்லைக்குள் வைத்து கைது செய்யப்படுகிறார் என்றால் அது ரஷ்யாவிற்கு எதிரான நேரடி போராகவே கருதப்படும் எனவும், எங்களின் ரொக்கெட்டுகள் யேர்மனை தாக்கும் என்றும் மெத்வதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments