முல்லையும் 6வது ஆண்டை தாண்டியது!

 


2017ம் ஆண்டின் மார்ச் 08 ம் திகதியன்று  ஆரம்பிக்கப்பட்ட முல்லைத்தீவு  மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டமும்  இன்றுடன் ஆறாவது ஆண்டினை தாண்டி பயணிக்க தொடங்கியுள்ளது.

சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் மகளிர் தினத்தை கறுப்பு தினமாக கடைபிடித்து கவனயீர்ப்பு போராட்டம்   ஒன்று  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவின் நகரப்பகுதியில் ஒன்று திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தவர்கள் ஏழு வருடங்களாக கிடைக்காத நீதி எப்பொழுது கிடைக்குமென கோசம் எழுப்பினர். ஐ.நாவே கண் திறந்து பார் என மகளிர் தினத்தில் வீதியில் நின்று தாய்மார்கள்  குரல் எழுப்பியிருந்தனர்.

ஏற்கனவே கிளிநொச்சி மற்றும் வவுனியா ,அம்பாறையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் ஆறுவருடங்களை கடந்துள்ள நிலையில் தற்போது முல்லைதீவில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமும் ஆறாவது ஆண்டினை தாண்டியுள்ளது.

ஏற்கனவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் ஜநா வரை சென்று தமது குரல்களை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments