பெலாரசில் அணு ஆயுதத்தை நிறுவும் ரஷ்யா: கலக்கத்தில் ஐரோப்பிய நாடுகள்!!


ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ஐரோப்பிய எல்லையைக் கொண்ட ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரசில் ரஷ்யா அணு ஆயுதத்தை நிறுவ உள்ளது.

உக்ரைன், போலாந்து, லிதுவேனியா, லடிவா ஆகிய நாடுகளை பெலாரஸ் எல்லையாக கொண்டுள்ளது. பெலாரசில் அணு ஆயுதத்தை நிறுவியபோதும் அதன் கட்டுப்பாடு அனைத்தும் ரஷ்யாவிடமே இருக்கும் என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளாக உள்ள ஐரோப்பிய நாடுகளில் அணு ஆயுதங்களை வைத்துள்ளது. 

1991-ம் ஆண்டில் சோவியத் யூனியன் சரிவின்போது உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் ரஷ்யா அணு ஆயுதங்களை வைத்திருந்தது. சோவியத் யூனியன் சரிவை தொடர்ந்து உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் தனிநாடுகளானதால் அங்கிருந்து 1996ம் ஆண்டுக்குள் அனைத்து அணு ஆயுதத்தையும் ரஷ்யா திரும்பப்பெற்றுக்கொண்டது. 

தற்போது பல ஆண்டுகள் கழித்து வெறொரு நாட்டில் ரஷயா அணு ஆயுதத்தை நிறுவும் நிகழ்வு உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெலாரசில் ரஷயா அணு ஆயுதத்தை நிறுவதால் ஐரோப்பிய நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன.

No comments