சாவகச்சேரியில் வீடு உடைத்து திருடியவர்கள் இணுவில் பதுங்கியிருந்த வேளை கைது!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி புகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து வீட்டு தளபாடப் பொருட்களை களவாடிய மூவர் இணுவில் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். சாவகச்சேரி கெரடாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த வீட்டுத் தளபாடப் பொருட்கள் கடந்த மாதம் களவாடப்பட்டிருந்தன.

அதனை அடுத்து வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த சாவகச்சேரி பொலிஸார், சந்தேகநபர்கள் இணுவில் பகுதியில் வீடொன்றில் தங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் மூவரை கைது செய்துள்ளதோடு களவாடிய பொருட்களையும் மீட்டுள்ளனர். 

No comments