கொழும்பிலுள்ளது இராணுவ குண்டர் படையாம்!

 


தென்னிலங்கையில் இடம்பெற்ற பேராட்டத்தை அடக்குவதற்கு எவன்ட் கார்ட் நிறுவனத்தின் துணை இராணுவக்குழுக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கோட்டாபய ராஜபக்சவினால் பயன்படுத்தப்பட்ட கடல் பாதுகாப்பு துணை இராணுவக் குழுவான எவன்ட் கார்ட் துணை இராணுவக்குழுவாக இருக்கலாம் .

உத்தியோகப்பூர்வ இராணுவம், ஆயுதங்கள் மற்றும் தடிகளை எடுத்துச் செல்லும்போது சரியான நீளம், வடிவம் மற்றும் நிறத்துடன் நிலையான தடிகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆனால் இந்த போராட்டத்தில் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரோ, அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் தடிகள் என்பன அவ்வாறு காணப்படவில்லை .

எனினும், அரசாங்க எதிர்பாளர்களை தடுக்க வருவோரால் நாட்டில் உள்ள இராணுவத்தினருக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். எவன்ட் கார்ட் நிறுவனமே இந்த வகையான துணை இராணுவக் குழுக்களை வைத்திருந்தது .

இதேவேளை, போராட்டங்களைக் கட்டுப்படுத்த வந்த இராணுவக் குழுக்களை உத்தியோகபூர்வ அரசாங்க இராணுவம் என உறுதிப்படுத்த முடியாது என இராணுவப் பேச்சாளரும் தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 7ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நடத்திய போராட்டத்தை கலைக்க வந்த இராணுவத்தினரின் கைகளில் இரும்பு மற்றும் மரத்தடிகள் இருந்ததா என்பதை கண்டறிய இலத்திரனியல் தடயவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.



இராணுவத்தினர் குழுவொன்று இரும்பு மற்றும் மரத்தடிகளை எடுத்துச் செல்லும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அனைத்து புகைப்படங்களும் பின்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டவை என்பதால் அதன் நம்பகத்தன்மையை தெளிவாக உறுதிப்படுத்த முடியாது என்றும், புகைப்படத்தில் இராணுவ வீரர்கள் கையில் தடிகளை பிடித்துள்ளனர் என்று உறுதியாக கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



அந்தப் படம் பழைய படமா அல்லது அன்றைய தினமே எடுக்கப்பட்ட படமா என்பதைச் சரிபார்க்க அதிக நேரம் எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

No comments