வடக்கின் போர் ஆரம்பம்!

 


"வடக்கின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும்  இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி இன்றைய தினம் வியாழக்கிழமை காலை ஆரம்பமாகியது. 

116 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டி, இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் நாளை மறுதினம் சனிக்கிழமை வரையான மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது. 

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியுள்ளது. 

இந்த ஆண்டுடன் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு பூர்த்தியாவதால் போட்டி தொடர்பான எதிர்பார்ப்பு இரு கல்லூரி மாணவர்கள் பழைய மாணவர்கள் மற்றும் கிரிக்கெட் இரசிகர்களிடம் காணப்படுகிறது.No comments