கண்டியில் பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது!


கண்டி, போகம்பர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கண்டி பொலிஸார் மற்றும் உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவு அதிகாரிகள் இணைந்து அப்பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

இதன்போது சந்தேகத்தின் பேரில் 4 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 39 கிராம் 265 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவர்கள் இன்று (05) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

குறித்த நடவடிக்கையில் 48 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்று பங்கேற்றுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments