நாகர்கோவிலில் தொடரும் பதட்டம் - வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு - மோட்டார்சைக்கிள்கள் தீக்கிரை!
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் வீட்டின் ஒரு பகுதி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு என்பன எரிந்துள்ளன.
அதிகாலை 12.30 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
நாகர் கோவில் பகுதியில் மயானம் ஒன்றிற்கு சுற்றுமதில் அமைக்கும் முயற்சியின் தொடராக ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து கடந்த திங்கட்கிழமை இரவு பொலிஸாருக்கும் மக்களுக்கு இடையில் மோதல் போக்கு ஏற்பட்டிருந்தது.
இதன் போது துப்பாக்கிப்பிரயோகமும் தடியடியும் பொலிஸார் மேற்கொண்டதாக மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பகல் இரண்டு தரப்புக்களும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் சமரசத்தில் ஈடுபட்ட நிலையில் மயானத்திற்கான மதில் அமைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Post a Comment