தேர்தல் இல்லையாம்!
அண்மையில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும், ஆனாலும் இந்த திகதியிலும் தேர்தல் நடத்தப்படாது ஒத்திவைக்கப்படலாம் என  தேர்தல் ஆணைகுழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் எதிர்வரும் 19ம் திகதியின் பின்னராக விசேட ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே தேர்தலை நடாத்தும் எண்ணம் ரணில் அரசிற்கு இருப்பதாக தெரியவில்லையென சிறீதங்க ஜெயசுரிய யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.No comments