ரணிலுக்கு முண்டுகொடுத்தால் சிறைதான்!அடுத்த வருடத்தின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை. இதனால் இப்போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்பவர்கள் புதிய அரசாங்கத்தின் போது சிறைக்கு செல்ல நேரிடும் என்பதனை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

“தேர்தல் நடத்துவதற்கு பணம் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் மின்சார கட்டண அதிகரிப்பு, வரி அதிகரிப்பு உள்ளிட்டவற்றில் கிடைத்த வருமானம் எங்கே? இப்போது டொலர் இருந்தாலும் ரூபாய் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது” என்றார்.

“இனி புதிய நாடகமொன்றை அரங்கேற்றுவர். பொருட்களின் விலைகளை குறைப்பர். இதனால் மக்களுக்கு பொருட்களில் சிறிய சேமிப்பு இருந்தாலும் மின்சாரக் கட்டணங்கள் உள்ளிட்ட மற்றையவற்றில் இழப்பே இருக்கும். இப்போது கடனை வாங்கிக்கொண்டு நாங்கள் நிதியில் பலமாக இருக்கின்றோம்” என்று கூறும் நிலைமையே உள்ளது என்றார்.


“இன்று மக்கள் மருந்து இன்றி அவதிப்படுகின்றனர். சர்வதேச நிறுவனங்கள் மருந்துக்கு உதவி செய்தனவே. எங்கே அந்த மருந்துகள். நீங்கள் வேலைக்காரர்கள் என்றால் மருந்தை கொண்டு வாருங்கள். ரணில் வழங்கும் உருண்டைகளை சாப்பிட வேண்டாமென அரச ஊழியர்களுக்கும் இதனை கூறுகின்றோம். புதிய அரசாங்கத்தின் கீழ் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக ரணில், சிறைக்குச் செல்ல நேரிடும் “என்றார்

No comments