பாலைதீவும் போச்சு!ஒருபுறம் வடக்கு கடலை இந்தியாவிற்கு தாரைவார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மறுபுறம் ஆட்களற்ற தீவகளையும் தாரைவார்க்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பருத்தித்தீவு கடலட்டை பண்ணைகள் பேரில் தாரை வார்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாலைதீவும் தாரைவார்க்கப்பட்டுள்ளது.

நீர்வேளாண்மை உற்பத்திகளான கடலட்டை வளர்ப்பு மற்றும் கடல்பாசி வளர்ப்பு போன்ற  நீர்வேளாண்மை உற்பத்திகளை பாலைதீவை அண்டிய பகுதிகளில் ஆய்வு ரீதியாக அடையளப்படுத்தப்பட்ட இடங்களில் தனியார் முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடனும், பாலைதீவை அண்டிய பிரதேச மக்களின்  பங்களிப்புடனும் மேற்கொள்ள அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முற்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் அரச அதிகாரிகளை அழைத்து அரச அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

கடற்றொழிலாளர்களுக்கு மேலதிக வாழ்வாதாரத்தினை வழங்கக் கூடிய குறித்த உற்பத்திகளை மேற்கொள்கின்ற தரப்புக்கள் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு வருமானத்தில் ஒரு பகுதியை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாலைதீவு அந்தோனியார் ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் திருவிழா கால செலவீனங்களுக்கும் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்திய தனியார் தொழிலதிபர் ஒருவர் 40 ஏக்கரை பாலைதீவில் கோரிய நிலையில் டக்ளஸின் அறிவிப்பு பாலைதீவும் தாரைவார்க்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.No comments