தாயை தாக்கிய தந்தை மகன் திருப்பி தாக்கியதில் தந்தை உயிரிழப்பு


மது போதையில் தாயை தாக்கிய தந்தையை மகன் திருப்பி தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார். 

பொலநறுவை பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 

மது போதையில் வீட்டுக்கு வந்த தந்தை தாயை இருப்பு கம்பியினால் தாக்கியுள்ளார். அதனை மகனும் மகளும் இணைந்து தடுக்க முற்பட்டுள்ளனர். 

அதன் போது , மகன் தந்தையின் இரும்பு கம்பியை பறித்து ,தந்தையை திருப்பி தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த தந்தையை அங்கிருந்து மீட்டு பொலநறுவை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி தந்தை உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து தந்தையை தாக்கி படுகொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயது சிறுவனான மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

No comments