அம்பாறையிலும் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களது போராட்டம் ஆறாவது ஆண்டினை தாண்டியும் தமிழர் தாயகமெங்கும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்;;நிலையில் அம்பாறை திருக்கோவிலில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினால் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் அமைப்பின் தலைவி செல்வராணி தலைமையில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது.
யுத்த காலப்பகுதிகளில் தமது உறவுகளை இழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டதற்குரிய தீர்வினைப் பெற்று தரும்படி கோரிக்கை விடுத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்திருந்தனர்.
இதனிடையே ஜெனிவாவின் 52வது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இறுதி யுத்தத்தில் உறவுகளை இழந்திருக்கின்றோம். இலங்கை நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றியும் அதற்குரிய தீர்வை வழங்க சர்வதேசம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுட்டவர்கள் சர்வதேசத்தை நோக்கி தமது வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களர் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment