இங்கிலாந்தில் காய்கறி வாங்க உச்ச வரம்பு விதிப்பு


இங்கிலாந்தில், காய்கறி வரத்து குறைந்ததால், சில பல்பொருள் அங்காடிகளில் காய்கறிகள் வாங்க உச்ச வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போரால், எரிபொருள் மற்றும் மின்சார கட்டணம் உயர்ந்து, விவசாயிகள் காய்கறிகளை சந்தைக்கு கொண்டுவரும் செலவீனங்கள் அதிகரித்தன.

விவசாயிகள் காய்கறி உற்பத்தியைக் குறைத்ததால், பல்பொருள் அங்காடிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டு, காய்கறி வாங்க அளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியதால் அண்டை நாடுகளிலிருந்து காய்கறிகளை இறக்குமதி செய்வதும் பாதிக்கப்பட்டுள்ளது.

No comments