கரிநாளில் அரசியலாம்!



வடகிழக்கு பல்கலைக்கழக  மாணவர்களது போராட்ட அறிவிப்புக்களை தமிழரசுகட்சியின் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் உள்ளிட்டவர்கள் தமது தேர்தல் காலப்பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதாக மாணவர்களிடையேயும் ஏனைய தமிழ் கட்சிகளிடையேயும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பெப்ரவரி 4ம் திகதி கடைகள்,வர்த்தக நிலையங்களை பூட்டி போக்குவரத்து சேவைகளை நிறுத்தி ஹர்த்தால் முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மாணவர்கள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனிடையே எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணியொன்று இடம்பெறவுள்ளது.

மாணவர்களது கிழக்கு நோக்கிய பயணத்திற்கு பல்வேறு தரப்புக்களும் ஆதரவை வெளியிட்டுவருகின்றன.

இந்நிலையிலேயே தமிழரசின் தேர்தல் அரசியல் சர்ச்சைகள் மூண்டுள்ளன.


No comments