கோவை கார் குண்டுவெடிப்பு : தமிழகத்தில் 40 இடங்களில் சோதனை ; இதுவரை 11 பேர் கைது!

 


கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் கடந்தாண்டுப் ஒக்டோபர் மாதம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று காலைமுதல் தமிழகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் 60 இடங்களில் சோதனை இடம்பெற்று வருகின்றது,

சென்னை, கோவை, நெல்லை, தென்காசி, மயிலாடுதுறை உள்பட தமிழகத்தில் மட்டும் 40 இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்துடன்தொடர்புடைய குற்றச்சாட்டில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments