குமாரிடம் தீர்வு உண்டாம்!

 அதிக இலாபமீட்டும் 53 அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர் குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்து இருக்கும்போது நாட்டில் மீண்டும் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது.

மக்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்கி அரசாங்கம் நட்டத்தை எதிர்கொள்வதாகக் கூறு; உண்மையில்லை. மக்கள் நெருக்கடியில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கமானது எரிபொருள் விலை அதிகரிப்பிலும் மின்கட்டண அதிகரிப்பிலும் அதிக இலாபத்தை பெற்றுக்கொள்கின்றது என்று முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை சாதாரண மக்களுக்கே எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.நாட்டின் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியமாக ஒரேயொரு பதில் என்றே நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள வேலைத்திட்டங்களை தவிர வேறு வேலைத்திட்டங்கள் இல்லையா?

நாட்டின் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு மாற்றுவழிகள் கிடையாதா?

மாற்று வழிகள் இருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் இன்றி முன்னோக்கி பயணிக்க முடியாது என்ற நிலைப்பாட்டையே மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர்.


அரசாங்கத்துக்கு உரித்தான நூற்றுக்கு 82 சதவீதமான இடங்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றை விற்பனை செய்வதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டதாகவே தெரியவருகின்றது.

விவசாய மக்களின் காணிகளை அரச, தனியார், சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு திட்டங்களை வகுத்துக்கொண்டு செல்கின்றனர்.

தொழில் சட்டங்களை கடுமையாக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

53 அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதில் இலாபம் பெறும் நிறுவனங்களையும் விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.


விற்பனை செய்வதற்கான அடித்தளத்தை இடுவதற்கா மின்சார சபையும் அதிக இலாபத்தை பெறுகின்றது என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.


இலாபம் பெறும் நிறுவனங்களையே யாரும் விலைக்கு வாங்குவர்.


சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இவை அனைத்தும் உள்வாங்கப்படும்.


நாட்டில் இன்று முன்னெடுத்து செல்லப்படும் வேலைத்திட்டங்களாகவே இவை இருக்கின்றன.


நாட்டின் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் மட்டும் பதிலள்ள என்றே முன்னிலை சோசலிச கட்சி என்ற முறையில் நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

No comments