அடுத்து ஜனாதிபதி தேர்தலே!இலங்கையில் அடுத்த ஆண்டே தேர்தல் நடைபெறுமெனவும் அது ஜனாதிபதி தேர்தலாக இருக்குமெனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே  நிதிப் பற்றாக்குறை காரணமாக, வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறித்து, நகர்த்தல் பத்திரம் மூலம் உயர் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத்  தேர்தலுக்கு பணம் வழங்க முடியாது என்று திறைசேரி நேற்று மாலை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மீண்டும் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.


No comments