கடன் பேரூந்தில் சுதந்திரம்!



உதவி இந்திய பேரூந்துகளை பொறுப்பேற்கும் நிகழ்வுடன் இலங்கை சுதந்திரதின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போக்குவரத்து சபைக்கென இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 50 பஸ்களை   இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார்.

இந்தியாவில் இருந்து 500 பஸ்கள் கடன் வசதியின் இறக்குமதி செய்ய கடந்த ஆண்டு அமைச்சரவையில் அனுமதி கிடைத்தது. இதற்கு இந்தியா அரசும் உதவி வழங்கியது. இதன்படி அண்மையில் 75 பஸ்கள் டிப்போக்களுக்கு வழங்கப்பட்டன.

ரிப்பன்களை வெட்டி இரண்டு பஸ்களை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்துவைத்தார்.  75வது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்து இந்த பஸ்களை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 மேலும் 40 பஸ்களின்  கொண்டுவரப்பட்டு பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதன்படி, இலங்கைக்கு இதுவரை 165 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், 500 பஸ்களை வழங்கும் திட்டம் 2023 மார்ச் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. 

No comments