செப்டம்பர் மாதம் வரை தடையில்லா மின்சாரம்!


இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நிலக்கரி இருப்புக்களை கொள்வனவு செய்துள்ளதாக லங்கா நிலக்கரி கம்பனி தெரிவித்துள்ளது.

குறித்த 13 இறக்குமதிகளுக்கான கொடுப்பனவுகள் நிறைவடைந்துள்ளதாக லங்கா நிலக்கரி நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்த 13வது கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் 12வது கப்பலில் இருந்து கையிருப்பு தற்போது இறக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான 36 நிலக்கரி ஏற்றுமதியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments