மஹிந்தவிற்கு பிரதமர் பதவியில்லை


தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இவ்வாறான செய்திகள் அரசாங்கத்தின் திட்டங்களை நாசப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு எந்தக் கட்சியும் கோரவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜ்பஸ்கஹ்விற்கு பதவியை வழங்க வழிவகை செய்யும் வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன இராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஆதரவளிக்குமாறு ஆளும்கட்சி உறுப்பினர்கள் தமக்கும் அவரது சக எம்.பி.க்களுக்கும் அழுத்தம் கொடுக்க முயற்சித்ததாக சன்ன ஜயசுமண தெரிவித்திருந்தார்.

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களினால் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அவர் கடந்த மே மாதம் பதவி விலகிஇருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments