வயோதிப தம்பதியினர் மீதான தாக்குதல் ; அனலைதீவில் தரையிறங்கியே தாக்குதல்!


யாழ்ப்பாணம் அனலைதீவு வயோதிப தம்பதியினர் மீது தாக்குதல் மேற்கொண்ட கும்பல் , படகொன்றில் அனலைதீவில் தரையிறங்கியே தாக்குதல் மேற்கொண்டுள்ளது எனவும் , கொள்ளை கும்பலின் பிரதான நோக்கம் ஆவணங்களை கொள்ளையிடுவதே எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கனடாவில் வசிக்கும் வயோதிப தம்பதியினர் ,அனலைதீவில் உள்ள தமது பூர்விக வீட்டினை புனரமைக்கும் நோக்குடன் அனலைதீவில் தங்கி வீட்டின் புனரமைப்பு வேளையில் ஈடுபட்டு இருந்தனர். 

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவை அண்டிய நேரம் அவர்களின் வீட்டிற்குள் வாள்கள் உள்ளிட்டவையுடன் உள்நுழைந்த கொள்ளையர்கள் , வயோதிப தம்பதியினர் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களின் ஆவணங்கள் உள்ளடங்கிய பையை கொள்ளையடித்து சென்று இருந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் , 

கொள்ளை கும்பலின் பிரதான நோக்கமே தம்பதியினர்களின் ஆவணங்களை கொள்ளையிடுவதே , ஏனெனில் அவர்கள் அணிந்திருந்த நகைகளையோ , ஏனைய பொருட்களையோ அவர்கள் கொள்ளையடிக்கவில்லை. 

கொள்ளை கும்பல் " சி. ஐ. டி யிடம் கொடுக்க கொண்டு வந்த ஆவணங்களை தா" என கோரியே தாக்குதல் மேற்கொண்டனர். 

அவர்களின் பயண பைகளில் சோதனையிட்டு , ஆவணங்கள் அடங்கிய பையை மாத்திரமே கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஏனையவற்றை அவர்கள் எடுத்து செல்லவில்லை. 

கொள்ளையடித்து செல்லப்பட்ட பைக்குள் , கடவுச்சீட்டுக்கள், விசா ஆவணங்கள் உள்ளிட்டவற்றுடன் ஒரு தொகை கனேடியன் டொலர் மற்றும் இலங்கை ரூபாய்க்கள் இருந்துள்ளன. 

கொள்ளை கும்பல் அனலைதீவுக்கு படகொன்றில் வந்து தரையிறங்கி கொள்ளையில் ஈடுபட்ட பின்னர் படகில் ஏறி தப்பி சென்றுள்ளனர்.

ஊர்காவற்துறை அல்லது குருநகர் பகுதியில் இருந்தே படகில் அனலைதீவுக்கு வந்து கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம். 

அதேவேளை குறித்த தம்பதியினர் மீது தாக்குதல் மேற்கொள்ள வெளிநாட்டில் இருந்து யாழில் இயங்கும் கூலிப்படைக்கு பணம் வழங்கப்பட்டு இருக்கலாம்.  கூலிப்படையை தாக்குதல் மேற்கொண்டு, கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம். என சந்தேகிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் வயோதிப தம்பதியினரிடம் பெற்ற வாக்கு மூலங்களின் அடிப்படையில் , அவர்களுக்கு முற்பகைகள் இருக்கின்றனவா எனும் கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments