சிறிய தந்தையின் தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் உயிரிழப்பு!


தாயின் இரண்டாவது கணவரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியை சேர்ந்த 11 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளார். 

தாயின் இரண்டாவது கணவர் சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்டதில் சிறுவன் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், மட்டக்களப்பு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து சிறுவனின் தாயின் இரண்டாவது கணவனை கடந்த 08ஆம் திகதி கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்தினர். நீதிமன்ற விசாரணைகளை அடுத்து குறித்த நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க மன்று உத்தரவிட்டது. 

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விடயம் தொடர்பில் பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

No comments