இளவாலை பொலிஸ் உத்தியோகஸ்தரின் மனைவி வாழைச்சேனையில் சடலமாக மீட்பு!


மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆசிரியை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கல்குடா பிரதான வீதி, போத்தாளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான சகுந்தலாதேவி (வயது 52) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியையின் கணவர் யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகின்றார்.  மூன்று பிள்ளைகளும் கொழும்பில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த ஆசிரியை வீட்டில் உயிரிழந்துள்ளார். 

வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அயலவர்கள் கிராம சேவையாளர் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்தமையை அடுத்து , பொலிஸார் வீட்டினுள் சென்ற வேளை ஆசிரியை உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். 

அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவித்து, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்பிய பொலிஸார் , தடயவியல் பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments