வேறு கட்சிகளுக்கு ஆதரவளித்த 1,137 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் நீக்கம்!


ஐக்கிய தேசியக் கட்சியின் ஆயிரத்து 137 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்து வருகின்றமை காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments