சி.வி.விக்கினேஸ்வரன் - ரெலோ அவசர சந்திப்பு!


தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இன்று பிற்பகல் 6 மணிக்கு யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ், யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments