யாழ். பல்கலைக்கழகப் பேரவையில் ஈபிடிபி!

 


யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக 9 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.இதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் திகதி முதல் அடுத்துவரும் மூன்றாண்டு காலத்துக்கு 9 புதிய வெளிவாரி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.

வழமை போலவே டக்ளஸ் மற்றும் அங்கயனின் சிபார்சில் பெயர்கள் அடங்கியுள்ளன.

உதவிக் கல்விப் பணிப்பாளர் பஞ்சநாதன் சுதர்சன் (ஈபிடிபி), சட்டத்தரணி பத்திநாதர் அன்ரன் புனிதநாயகம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் யாழ். மாவட்டப் பணிப்பாளர் தில்லையம்பலவாணர் விமலன்(ஈபிடிபி), சப்ரகமுவா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் மகிந்த எஸ்.ரூபசிங்க, வாழ்நாள் பேராசிரியர் குமுது விஜேவர்த்தன ,ஓய்வுபெற்ற பேராசிரியர் ஞா. பிலேந்திரன், சட்டத்தரணி டி.ரெங்கன் (ஈபிடிபி), ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதவான் நந்தசேகரன் மற்றும் ஏந்திரி ரி. சாந்தாதேவி (ஈபிடிபி) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments