வாக்கு சீட்டு அச்சடிக்கும் பணிகள் ஆரம்பம்!


வாக்குச் சீட்டு தயாரிக்கும் பணிகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை முறையாக கையளித்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்த தகவல்கள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கமைய 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தனித்தனியான வாக்குச் சீட்டுகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறு திட்டமிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் அச்சடிக்க உடனடியாக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

No comments