தஞ்சாவூரில் மாவீரர் லெப். போசனின் கல்லறை உடைப்பு


தமிழ்நாடு தஞ்சாவூர் வடக்குவாசல் இடுகாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பைச் சேர்ந்த மாவீரர் லெப்டினன்ட் போசன் கல்லறை கடந்த 34 ஆண்டுகளாக அமைந்திருந்தது. அக்கல்லறை   இன்று செவ்வாய்க்கிழமை (24.1.2023) இடிக்கப்பட்டுள்ளது. 

லெப்டினன்ட் போசனின் நினைவு கல்வெட்டில் மறைவு - 27-06-1989 திறப்பாளர் : தமிழினக் காவலர் மானமிகு கி.வீரமணி எம்.ஏ.பி.எல் (திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்) நகர திராவிடர் கழகம். தஞ்சாவூர். என்று எழுதப்பட்டிருந்தது.

1989 ஆண்டு காலகட்டத்தில் விழுப்புண் அமைந்த நிலையில் தழிழ்நாட்டு கொண்டுவரப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய உளவுத்துறையில் மோப்பம் பிடித்து போசனை இருக்குமிடமறிந்து அவரை கைது செய்ய ஏற்பாடுகள் நடந்தேறியுள்ளது. இதை அறிந்த லெப்டினன்ட் போசன் அவர்கள் எதிரிகளின் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக தன் கழுத்திலேயே சயனைட் குப்பி கடித்து சாவைத் தழுவியுள்ளார் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments