புதிய கூட்டணி உதயம் - குத்து விளக்கே சின்னம்!


 ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை மதியம் 12.20 மணியளவில் கைச்சாத்திட்டனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எனும் பெயரில்  குத்துவிளக்கு சின்னத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில்  இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர்

கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

கூட்டணி ஒப்பந்தத்தில் புளொட் சார்பாக த.சித்தார்த்தனும் ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதனும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய கட்சி சார்பாக என்.ஸ்ரீகாந்தாவும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தனும் கையெழுத்திட்டனர்.

சின்னம் தொடர்பில்  இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் நேற்றைய கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

இந்நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியை இணைக்க சமசர முயற்சிகள் மேற்கொண்டபோதும் பலனளிக்காத நிலையில் மீதமிருந்த ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்கு வந்து கூட்டணி அமைக்க முடிவு எட்டப்பட்டு, கையொப்பம் இட்டனர்.

No comments