தமிழரசு தனியே தன்னந்தனியே!



உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதென்பதில் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட தலைமை நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

கட்சி தலைமை பங்காளிக்கட்சிகளினை கூட்டு சேர்ந்து போட்டியிடுவது பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அதனை தமிழரசுக்கட்சியின் யாழ்.தலைமை முற்றாக நிராகரித்துள்ளது.

பங்காளி கட்சிகள் எவையுமே உள்ளக கட்டமைப்பினை கொண்டிருக்கவில்லை.இந்நிலையில் பங்காளிக்கட்சிகள் என்ற பேரில் பங்காளிகளிற்குபுத்துயிர் ஊட்ட தயாரில்லையெனவும் தமிழரசு உள்ளுர் தலைமைகள் வாதிடுகின்றன.

இதனிடையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் 4 நிலைப்பாடுகளை கொண்டுள்ளதன் காரணமாக  குழப்ப நிலை நீடிக்கின்றது.

இதன் காரணமாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவுற்றாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சியாளர்கள் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில்  ஆர்வமற்றேயுள்ளனர்.தற்போதைய நெருக்கடிகள் மத்தியில் தேர்தல் முடிவுகள் பின்னடைவை தருமென்ற அச்சங்காணப்படுகின்றது.

 

No comments