தேர்தல் வேண்டாம்:வருகின்றது அன்பான(!) அழைப்புக்கள்!தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம் மொஹமட்டிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

பதவி விலகுமாறு வட்ஸ்எப் மற்றும் தொலைபேசி அழைப்பின் மூலம் அவருக்கு நேற்றிரவு(27) அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறினார்.

இதனையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம் மொஹமட்டின் வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

No comments