சட்டி சுட்டதடா?சுமா சிங்க கொடியேற்றமாட்டாராம்!



 இலங்கையின் சுதந்திர தினத்தில் பங்கெடுப்பது பெருமையெனவும் இராணுவ பொப்பி மலர் அணிவதை தேச கடமையாகவும் சொல்லி வந்திருந்த தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இம்முறை கறுப்பு நாளாக கொண்டாட முடிவு செய்துள்ளார்.அதிலும் நல்லாட்சி காலத்தில் ரணிலுடன் இலங்கை தேசியக்கொடியேற்றுவதை எம்.ஏ.சுமந்திரன் நியாயப்படுத்தி வந்திருந்தார்.

எனினும் தற்போது ஜனநாயகம் என்ற போர்வையிலே பேரினவாத ஆட்சி காரணமாகவே சுதந்திரம் கிடைத்தும் 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள மக்களுக்கு அரசியல் சுதந்திரம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையை பார்க்கின்றபோது சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். நாடு கடனாளியாக இருக்கின்ற நிலையில் 75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாட விரும்புவதை அடியோடு நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிக்கவேண்டும் என்றும் பெப்ரவரி 04 ஆம் திகதி மட்டக்களப்பில் கறுப்புக் கொடிப் போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் என்ற தொனிப்பொருளில் பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை தமிழரசு கட்சி, போராட்டத்தை நடத்தும் எனவும் அவர் கூறினார்.

No comments