பொருண்மிய நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் தாஸ் காலமானார்


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்ட போராளி தாஸ் (சுந்தரமூர்த்தி) இந்தியா வில் 28/01/2023 சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார்.

தாஸ் அண்ணா தனது தொடக்கத்தில் ஈரோஸ் அமைப்புடன் இணைந்து தமிழின் விடுதலைக்காக போராடியவர்.

இந்திய அமைதிப்படை காலத்தின் மிதவாத அரசியலில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று யாழ் மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதியாகவும் செயல்பட்டவர்.பின்னர் ஈரோஸ் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்த போது . தாஸ் அவர்களும் இணைந்து கொண்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தமிழீழ ஆய்வு நிறுவனமாகவிருந்து. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனமாக பெயர் மாற்றம் கொண்டடிருந்த நிறுவனத்தின் திட்டமிடல் பகுதியின் பணிப்பாளராக இருந்தவர்.

திட்டங்கள் திட்டுவதிலும்.அதனை திட்டவரைப்பாக்குவதிலும். கண்காணிப்பு. மீளாய்வு செய்வதிலும் துறைசார்ந்த நிபுணத்துவமுடையவராக இருந்தவர்.தாஸ் அண்ணா சிறந்த எழுத்தாளர். தமிழீழ வளங்கள் தொடர்பாக. தேடலுள்ளவராகவும். நேரடி கள அனுபவமுள்ளவராகவும் இருந்தவர்.சொந்த மண்ணைவிட்டு வெளியேறிய சூழ்நிலையிலும் சொந்த மண்ணின் மேம்பாட்டிற்காகவே இறுதிவரை உழைத்தவர்.

No comments