தமிழ் தரப்புக்களை சமஸ்டிக்கு வரச்சொல்லி போராட்டம்!ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவற்குழியில்  கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடு;க்கப்பட்டிருந்தது.

மறுபுறம் சில வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்ற மாகாண சபை தேர்தலும் உடனடியாக நடத்தப்பட வேண்டும். மாகாண சபைகள் இயங்காமல் இருப்பது என்பது மிகவும் பாரிய பின்னடைவு என எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே  மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாதாகவும் இன்று ஒன்றுகூடிய மக்கள்,  தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் எனத் தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


No comments