லஞ்சம் பெற முற்பட்ட தவிசாளர் கைது!

 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவனல்லை பிரதேச சபையின் தவிசாளர் சமந்தா ஸ்டீபன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவனெல்லை நகரில் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்குவதற்காக, மாவனெல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற முற்பட்ட போது, ​​இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments