மன்னார் நீதிமன்ற காவலில் இருந்த டிப்பரில் இருந்து 116 கிலோ கஞ்சா மீட்பு!


மன்னார் நீதவான் நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்க்கப்பட்டு இருந்த டிப்பரில் இருந்து 116 கிலோ கஞ்சா நேற்றைய தினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 

கடந்த நவம்பர் மாதம் இலுப்பைக்கடவை பகுதியில் குறித்த டிப்பர் வாகனம் ஒரு தொகை கேரளா கஞ்சா போதைப்பொருளை கடத்தி சென்று கொண்டிருந்த வேளை ,  பொலிசாரின் சோதனை நடவடிக்கையின் போது சிக்கிக்கொண்டது. 

அதனை அடுத்து டிப்பரில் இருந்த இருவரையும் , டிப்பர் வாகனம் மற்றும் மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருள் ஆகியவற்றை மன்னார் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தினர். 

அதனை அடுத்து கைதான இருவரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்ட நீதவான் , வாகனத்தை நீதிமன்ற காவலில் தடுத்து வைக்கவும் உத்தரவிட்டார். 

இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , நீதிமன்ற காவலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த , டிப்பர் வாகனத்தினுள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் மேலும் 116 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

No comments