ரணிலின் நம்பிக்கையிழந்த சுமந்திரன்


யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் தினம் திங்கட்கிழமை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் அவ்வாறு தெரிவித்தார்.

 மேலும் தெரிவிக்கையில், 

எந்த காலப்பகுதிக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என சொல்லவில்லை. 108 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்கப்படலாம் என்றே சொல்லுகின்றார்கள்.

உடனடியாக விடுவிக்கப்படலாம் என பல நாட்களாக சொல்லுகின்றார்கள் ஆனால் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதனால் நேற்றைய கூட்டத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பாக எங்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை என்றார்.

No comments