பல்கலை மாணவி படுகொலை ; மாணவியுடன் கற்ற சக மாணவன் கைது!


கொழும்பு குதிரை பந்தய திடலில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக சக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவி ஒருவர் இன்றைய தினம் வெட்டுக்காயங்களுடன், குதிரை பந்தய திடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார்  தீவிர விசாரணைகளை முன்னெடுத்து இன்றைய தினம் மாலையே மாணவியுடன் கற்ற சக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். 

வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து குறைத்த மாணவனை கைது செய்ததாகவும் , கைது செய்யப்பட்ட மாணவனிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கத்தி மற்றும் இரத்த கறைகள் படிந்த பை ஒன்றினையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் 

அத்துடன் குறித்த மாணவனும் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் , அதன் பின்னரே கொலைக்கான காரணங்களை கண்டறிய முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

No comments