பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!


ஹங்வெல்ல நிரிபொல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் உள்ள கடையொன்றின் உரிமையாளரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான "கரவிட்ட சியா" என்ற புனைப்பெயர் கொண்ட நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார் என மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்ய முற்பட்டவேளை சந்தேகநபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், தாம் மேற்கொண்ட பதில் துப்பாக்கிச் சூட்டில், பலத்த காயமடைந்த சந்தேக நபர் அவிஸ்ஸாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

No comments